எதிர்வரும் 19ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது. 

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்திருந்தது. 

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அதன்படி பாடசாலைகளுக்கும் அதே விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் குறித்த நாளை விடுமுறை தினமாக கருதுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை