அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மான



அத்தியாவசியமற்ற  அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை  மனித வளம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு  ஏனைய சில நிறுவனங்களில் மேலதிகமாகவுள்ள ஊழியர்களை  சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை  முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனை தெரிவித்தார்.

இதேவேளை அரச  ஊழியர்களை சேவையில்  நியமிப்பது தொடர்பில்  மறுசீரமைப்புகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  அரச சேவைவயை  முறையாகவும் செயற்பாட்டு ரீதியாகவும்  உயர்ந்த மட்டத்தில் கொண்டு நடத்துவதற்காக  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.

அதன்படி  சில நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதியது பழையவை