விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கசிப்பு போத்தல்களுடன் நபர் ஒருவரை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களினால் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து ஐ.பி.கஜநாயக்க மற்றும் மதுபோதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் டி.கிருபாகரன் ஆகியோருடன் பொலிஸார் இணைந்து கல்லடி பாலப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கல்லடி பழைய பாலம் ஊடாக பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 10கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
குறித்த நபர் உரப்பை ஒன்றில் கசிப்பு போத்தல்களை மறைத்த நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து கல்லடி பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற போது குறித்த நபரை சோதனையிட்டபோது குறித்த கசிப்பு போத்தல்கள் கைப்பட்டப்பட்டுள்ளதாக மதுபோதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் டி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.