இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (21) வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

