மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை காரணமாக மண்முனை தென்மேற்கு ,மண்முனை மேற்கு, போரதீவுப்பற்று போன்ற பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த கடுக்காமுனை ,பண்டாரியாவெளி ,படையாண்டவெளி, படையாண்டகுளம் ,சேவகப்பற்று, கல்லடிமுனை, பட்டிப்பளை, பிரதர்மார் கண்டம், காஞ்சிரங்குடா வடக்கு, வவுணதீவு ,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள எட்டாயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அழிவுறும் அபாய நிலையில் உள்ளது.
விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு இணங்க வெள்ள நீர் வடிந்தோடும் முகமாக மட்டக்களப்பு முகத்துவாரத்தினை அகழ்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.