வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.

நாட்டின் பிற பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடனான மழையோ பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதோடு, காற்றினுடைய வேகமானது மணித்தியாலத்துக்கு 20 தொடக்கம் 30 கிலோ மீற்றர் வரை வீசலாம் என கூறப்பட்டுள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த கடற்பரப்புக்களில் பலத்த காற்று வீசுவதோடு அப் பிரதேசங்களின் கடலானது சற்று கொந்தளிப்பாக காணப்படும்.
புதியது பழையவை