பிரபாகரன் உயிரோடு இருந்தால் அது தொடர்பான செய்தி அதிரடியாக தான் வரும் என்பது தனது எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அண்மையில் பழ நெடுமாறன் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் கூறும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக இவ்வாறான கருத்துக்களை ஒவ்வொருவரும் மாறி மாறி போடுகின்றமை வழமை.
தெளிவாக ஆராய வேண்டிய விடயங்கள்
பிக்குமார் அரசியலமைப்பை எரிக்கிறார்கள். எரித்த பிக்குவை சுட்டதாக அவர் ஊடக சந்திப்பொன்றை நடத்துகிறார்.
அரசியலமைப்பை எரித்த பிக்கு தன்னை சுட வந்ததாக கண்ணீர்விட்டு அழுகிறார். அதேநேரத்தில் இப்படியான ஒரு செய்தி வருகிறது. இவை அனைத்தையும் அவதானித்து நாம் தெளிவாக ஆராய வேண்டும்.
பிரபாகரன் உயிரோடு இருந்தால் நேரடியாக வந்து அவர் அதை மக்களுக்கு சொல்வார் என நான் எதிர்பார்க்கிறேன்.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய விதத்தை வைத்து இந்த விடயத்தை சொல்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.