உலகம் முழுவதும் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியுள்ளமையினால் பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
செல்போன் மூலமும், கணினி மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை கொண்டு டுவிட் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செல்போன் மூலம் டுவிட் செய்தால், உங்கள் டுவிட்டை அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து டுவிட்டரில் பிழை வந்துள்ளது.
அதேவேளை கணினி மூலம் டுவிட் செய்தால், தினசரி டுவிட் வரம்பை தாண்டிவிட்டீர்கள்' என்று பிழை வந்துள்ளது.
இதன் காரணமாக டுவிட்டர் பயனாளர்கள் டுவிட் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.