இலங்கையில் வாகன சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்!



மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணை வழங்காமல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரிகள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர், பொலிஸ் பிணையில் அந்த சாரதிகளை விடுவிக்க பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர்.

மேலும், குறித்த வாகனத்தை வேறொரு நபருக்கு விடுவிக்கும் திறன் பொலிஸாருக்கு இருந்தது. எப்படியிருப்பினும் இனிமேல் விபத்துக்களை குறைக்கும் வகையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதை நிறுத்துவதற்காக, கைது செய்யப்படும் சாரதிகளுக்கு பொலிஸ் பிணை வழங்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
புதியது பழையவை