மகளை வன்புணர்ந்த தந்தை மற்றும் நண்பர் கைது!



பத்து வயது முதல் தனது மகளை  தொடர்ச்சியாக ஆறு வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தையும் அவரது நண்பர் ஒருவரும் நேற்று கருவலகஸ்வெவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தையால் மகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக நண்பர் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணையில் இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியான மகளுக்கு தற்போது 16 வயது எனவும், புத்தளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் பத்தாம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார் எனவும், அவரது தந்தைக்கு 44 வயது எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய அவரது தந்தையின் நண்பருக்கு 39 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயார் தொழில் நிமித்தமாக வெளியே சென்றிருந்த வேளையில் ஆறு வருடங்களுக்கு மேலாக சிறுமியை இவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது என்று மறுத்த தாய், பகலில் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு சென்று மாலை தாமதமாகத் திரும்புவதாக காவல்துறையினரிடம் கூறினார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் கருவலகஸ்வெவ பகுதியில் உள்ள தபோவ பகுதியை சேர்ந்தவர்கள். சிறுமியின் தந்தைக்கு எதிராக தகவல் வழங்கிய நபர், அவளது தந்தைக்கு தெரிந்தே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சந்தேகநபர்கள் நேற்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் சிறுமியை புத்தளம் ஜே.எம்.ஓ ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருவலகஸ்வெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை