புலிகளின் தலைவர் உயிரோடு! ஆதாரங்கள் கிடைத்தவுடன் ஊடகங்களில் வெளியிடப்படும் - பழ. நெடுமாறன்



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரங்கள் கிடைத்தவுடன் ஊடகங்களில் வெளியிடப்படும்
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருபதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த கூற்றை, முன்னர் மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை