சூரியனால் பூமிக்கு ஏற்படப் போகும் பேராபத்து



சூரியனின் அமைப்பு மற்றும் அதன் செயற்பாடு தொடர்பில் நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.

குறித்த ஆய்வின் இறுதியில் அதிர்ச்சிகரமான எச்சரிக்கை ஒன்றினை நாசா வெளியிட்டுள்ளது.

சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு கூடம் ஆய்வு செய்து வருகின்றது.

பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி ஒன்று சூரியனில் காணப்படுவதாக நாசா கண்டறிந்துள்ளது.

இதனை கரோனா ஓட்டை என விஞ்ஞானிகளால் கூறப்பட்டுள்ளது.

இது சூரியனின் ஒரு பகுதி மறைக்கப்பட்டது போல தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கரும்புள்ளியை சூரியனின் தென்துருவ பகுதியருகே நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டறிந்துள்ளது.

இதன் விளைவாக, புவிகாந்த புயல்கள் மற்றும் சூரிய காற்று ஏற்படலாம் என அமெரிக்காவின் என்.ஓ.ஏ.ஏ. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஓட்டையின் மூலம் வெளிப்படும் சூரிய காற்றானது மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இது தொடர்பிலான மேலதிக ஆராய்ச்சிகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


சூரியனில் இருந்து வெளிப்படும் சக்திவாய்ந்த துகள்களால், பூமியின் காந்தபுலம், செயற்கை கோள்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய வலையமைப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த கரோனா ஓட்டையானது 3 லட்சம் கிலோ மீற்றர் முதல் 4 லட்சம் கிலோ மீற்றர் வரை பரந்து விரிந்துள்ளது.

இது பூமியை விட பல மடங்கு அளவில் பெரிதாக உள்ளது என நாசாவின் அறிவியல் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் யங் என்பவர் கூறியுள்ளார்.
புதியது பழையவை