மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் நான்கு சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிமலே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் கணவர் என தெரியவந்துள்ளது.
சிறுமிகள் முன்னிலையில் நிர்வாணமாக நின்று பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றச்சாட்டின் பெயரில் குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் அதிமலே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.