தெருத் தெருவாக பணம் வசூலிக்கும் செயற்பாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி!


மே தின நிகழ்வு நடத்துவதற்க்காக தெருத் தெருவாக பணம் வசூலிக்கும் செயற்பாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் மே தின கொண்டாட்ட நிகழ்வை நடத்துவதற்க்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாரிய சந்தேகம்

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இவ்வாறான நடவடிக்கை மூலம் யாரை ஏமாற்ற முயல்கின்றனர் என்ற பாரிய சந்தேகம் எழுத்துள்ளது.

கடந்த சில வாரத்துக்கு முன்பதாக பல காணிக் கொள்ளை தொடர்பில் (இறந்த தகப்பனின் பெயரில் பல ஏக்கர் காணிகள், குடும்ப உறவுகளுக்கு பல ஏக்கர் காணிகள்) பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது பல விமர்சனங்கள் எழுத்துள்ள நிலையில், இவ்வாறான நடவடிக்கை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை யாரை ஏமாற்ற நடக்கும் வேலைத்திட்டம் என்ற சந்தேகமும் எழுத்துள்ளது.

கிழக்கை மீட்கப் போகிறோம் என ஆரம்பித்து தற்ப்போது கிழக்கை ஏப்பமிட்டுள்ள பிள்ளையானின் நடவடிக்கை மக்கள் மத்தியில் வேடிக்கையாக பார்க்ககூடியதாக இருப்பதாக அறியமுடிகின்றது.

புதியது பழையவை