எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்குத் தேவையான நிதியை இதுவரைக்கும் திறைசேரி வழங்காததால், அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.