விபசாரத்தில் ஈடுபடும் அலுவலக பெண்கள்!அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை விபசாரத்திற்கு விற்கும் தொழில் அம்பலமாகியுள்ளது.

மொரட்டுவ பிரதேசத்தில் நடமாடும் விபசார வியாபாரத்தை நடாத்திய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இது தெரியவந்துள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் பலம் பொருந்தியவர் எனக் கூறப்படும் இவரிடம் நீண்ட நேர விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

ஒரு பெண்ணுக்காக ஒரு மணிநேரத்திற்கு 55,000 ரூபா அறவிடப்படுவதாகவும், பெண்கள் அலுவலகங்களில் பணிபுரிவதால் இரண்டு மணிநேரம் குறுகிய விடுப்பில் வருவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


முன்பணம் உறுதி செய்யப்பட்டு, பரிவர்த்தனை உறுதிசெய்யப்பட்ட பிறகு,குறித்த பெண்களுக்கு அறிவிக்கப்பட்டதும், அவர்கள் இரண்டு மணி நேர குறுகிய விடுப்பு எடுத்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, அதன் பிறகு அவர்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளம் போதாததால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க இந்த பெண்கள் தூண்டப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதியது பழையவை