துப்பாக்கி சூட்டில் கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்
காலி, ஹபராதுவ பகுதியில் இன்று (24) காலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்துள்ளார்.

 

முச்சக்கர வண்டியில் பயணித்த தம்பதியர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

துப்பாக்கிச் சூட்டில் 38 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை