கிளிநொச்சி ஏ9 வீதியில் பாரிய விபத்து!

கிளிநொச்சி - பளை, முல்லையடி பகுதியில் சற்றுமுன் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முல்லையடி பகுதியில் ஏ9வீதி் அருகே மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

வாகனம் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதியது பழையவை