நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை - விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்!நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க கோரி சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் முன் இன்றையதினம்(07.06.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், வாய்களில் கருப்பு துணிகளை கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.புதியது பழையவை