கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் - கஜேந்திரகுமார்- பொன்னம்பலம்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய அவர் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை