உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் உள்ள கிணறுகள் சுத்திகரிப்பு!வடக்கு கிழக்கில் இருந்து கதிர்காம திருத் தலத்திற்கு செல்லும் பாத யாத்திரியர்களின் சுகாதார நலன் கருதி உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில்
அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டன.

அடியார்களின் சுகாதார நலன் கருதி ஆலய வளாகத்தில் உள்ள கிணறுகள் தூர்வாரப்பட்டு குப்பை கூழங்கள் அகற்றப்பட்டு குளோறின் இடப்பட்டு பாவனைக்கு
உகந்த முறையில் கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டன.

கிணறுகளை சுத்திகரிக்கும் பணியினை அம்பாறை மாவட்ட சுவாமி தம்பையா அடிகளார் திருத் தொண்டர் அமைப்பினர் முன்னெடுத்தனர்.

உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து பாத யாத்திரியர்கள் கதிர்காம திருத்தலத்திற்கு செல்வதற்கான குமண காட்டுவழிப் பாதை இம்மாதம் 12ஆம் திகதி
திறந்து விடப்படவுள்ளதுடன் 25ஆம் திகதி பாதை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை