07 வயது சிறுமஇ துஷ்பிரியோகம் தந்தை மற்றும் மாமன் கைது!மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையாருடன் வாழ்ந்து வந்த சிறுமியை 49 வயதுடைய தந்தையாரும் 52 வயதுடைய சிறுமியின் மாமனாரும் இணைந்து கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் மேற் கொண்டு வந்துள்ள நிலையில் சம்பவ தினமான நேற்று இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ​​அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதியது பழையவை