1600 லீட்டர் தாய்ப்பாலை தானம் செய்து கின்னஸ் சாதனைஅமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் இதுவரை 1600 லீட்டர் தாய்ப்பாலை தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் வசிப்பவர் எலிசபெத். இவர், ஹைப்பர்லாக்டேசன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது சராசரி தாய்ப்பால் சுரப்பை விட சுமார் 8 முதல் 10 மடங்கு அதிகமாக இவருக்கு பால் சுரக்கிறது.

இவர், ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கும் பால் உற்பத்தி செய்வதாகவும், இதனால் பல குழந்தைகளின் பசியைப் போக்குவதாக கூறப்படுகிறது.

2 குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 1600 லீட்டர் தாய்ப்பாலை ஒரு வங்கிக்கு நன்கொடை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை