மட்டக்களப்பு மக்களின் குடிநீரை பூர்த்திசெய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

மட்டக்களப்பு தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதி மக்களின் குடிநீரை பூர்த்திசெய்யும் வகையிலான வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.


பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இதற்கு என 100மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.


குடிநீர் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மைலம்பாவெளி ஸ்ரீமுருகன் ஆலய வீதியில் நடைபெற்றது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நீர்வழங்கல் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.


இதன்மூலம் நீண்டகாலமாக குடிநீர் கோரி வந்த இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை