மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து – பெண் உயிரிழப்பு!மட்டக்களப்பு – ஆரையம்பதி பொதுச்சந்தைக்கு அருகில் லொறி மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதை மாறுவதற்காக சென்ற பெண் மீது லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பெண் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஆரையம்பதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை