மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் நுழைவாயில் மற்றும் பாடசாலையின் 75 ஆம் ஆண்டு நிறைவையெட்டிய நினைவுத் தூவி ஆகியவற்றிற்கான அடிக்கல் நேற்று(05-08-2023) நடப்பட்டது.
சமூக ஜோதி மு.இளங்குமார் அவருடைய ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட பழைய முன் நுழைவாயினை அகற்றி புதிய நுழைவாயில் அமைக்கும் பொருட்டு அவரது மனைவி திருமதி நிவேதனா இளங்குமார் அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டில் குறித்த நுழைவாயில் அமைப்பதற்கான அடிக்கல் பாடசாலையின் அதிபர் திரு சி. சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் 1993 ஆம் ஆண்டு கண்ணகி மகா வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்றில்1993 ஆண்டு இணைந்து கல்வி கற்ற மாணவர்களினால் 75 ஆவது ஆண்டு நிறைவையெட்டிய நினைவுத் தூவி அமைப்பதற்குமான அடிக்கல் நடப்பட்டது.
இதற்கான நிதி உதவியினை 1993 ஆம் ஆண்டு பாடசாலையில் ஆண்டு ஒன்றில் இருந்து கல்வி கற்ற மாணவர்களினால் நிதி வழங்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் பாடசாலை அதிபர்களான சா.பரமானந்தம் சா.பரமானந்தம் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பழைய மாணவர் சங்க செயலாளர் பழைய மாணவர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்ததோடு சிறப்பான முறையில் இந்த பணி நடைபெறுவதற்கு இறைவனை பிராத்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.