மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு காயம்!மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்று(05-08-2023) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி கல்முனை மட்டக்களப்பு பிரதான பிரதான வீதி வழியே செட்டிபாளையம் பகுதி ஊடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியானது செட்டிபாளையம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பயணித்துக்கொண்டிருந்த போது நிலை தடுமாறி வீதியோரமிருந்த மின்சாரத்தூணில் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு வீதியோரமாக நின்றுகொண்டிருந்தவர் மேல் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் வீதியோரம் நின்றுகொண்டிருந்த செட்டிபாளையத்தை சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர் காயமடைந்ததோடு முச்சக்கர வண்டியை செலுத்திவந்த எருவில் பகுதியை சேர்ந்த இந்துமத குரு ஒருவருக்கும் காயமேற்பட்டுள்ளதோடு வைத்திய சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துச் வருகின்றனர்.


புதியது பழையவை