மட்டக்களப்பில் குடும்பப் பெண்ணை காணவில்லை - காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!


மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வசிக்கும் அழகைய்யா சாந்தினி (வயது 28) என்ற பெண்ணை நேற்று வியாழக்கிழமை முதல் காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஒன்றரை வயது குழந்தையின் தாயாவார். தனது குழந்தையின் பிறந்தநாளிற்காக குழந்தைக்கு உடை வாங்கவென அவர் நேற்று காத்தான்குடிக்கு சென்றுள்ளார். எனினும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் குழந்தையின் பிறந்தநாளிற்காக கணவர் அனுப்பிய பணத்தை வங்கியிலிருந்து எடுத்து குழந்தைக்கு உடை வாங்கி வருகிறேன் என தெரிவித்து காத்தான்குடிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் அவர் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இவரை தெரிந்தவர்கள் அல்லது இவரை எங்கேனும் கண்டால் 0761989243 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறும் குழந்தை தாயை கேட்டு ஓயாமல் அழுது கொண்டிருப்பதாகவும் குடும்பj;தினர் தெரிவிக்கின்றனர்.

புதியது பழையவை