மான் இறைச்சி என்ற பெயரில் குரங்கு இறைச்சி விற்பனை எச்சரிக்கை!



அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மான் மற்றும் மரை இறைச்சிகள் எனும் பெயரில் குரங்கு இறைச்சிகளை மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதனை அறியக்கூடியதாக இருக்கிறது.

சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத மான், மரை உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுதல், விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல், வீடுகளில் சேமித்து வைத்திருத்தல், உணவுக்காக எடுத்துக் கொள்ளுதல் என எமது நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்ற நிலையில். மான், மரை போன்ற இறைச்சிகளை அதன் ருசி தன்மைக்காக ஒருமுறையேனும் உண்ண வேண்டும் எனும் விருப்பில் மக்கள் சிலர் கொள்வனவு செய்கிறார்கள்.

அவ்வாறு கொள்வனவு செய்யும் மக்களையும் ஏமாற்றி குரங்கு இறைச்சிகளை மான் இறைச்சி என விற்பனை செய்யும் அளிக்கம்பையை சேர்ந்த ஒரு சில வியாபார கும்பல் செயற்பட்டு வருவதாக அறிய கூடியதாக இருப்பதுடன். குறித்த செயற்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே மக்கள் இவ்வாறான மான் மற்றும் மரை என வன விலங்கு இறைச்சிகளை கொள்வனவு செய்வது உணவுக்காக எடுத்துக்கொள்வது என்பன சட்டத்தின் குற்றமான செயற்பாடுகள் என்பதனால் இவற்றினை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புதியது பழையவை