சல்யூட் அடிக்காத காரணத்தால் கான்ஸ்டபிளை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் - இலங்கையில் சம்பவம்தனக்கு சல்யூட் அடிக்கவில்லை எனக் கூறி புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காதில் தாக்கியதாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் வங்கி ஒன்றின் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்ததாகவும் சீருடையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு அக் கான்ஸ்டபிள் சல்யூட் அடிக்கவில்லை என்பதற்காக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை