மின்னல் தாக்கியதில் 15 வயது மாணவன் உயிரிழப்பு!மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாத்த, வத்துகொடை பிரதேசத்தில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கிய போது பாடசாலை மாணவர் தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், மின்னல் தாக்கியதில் மாணவன் அதிர்ச்சியடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும், பின்னர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மாணவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை