மட்டக்களப்பில் குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் வைத்தியசாலையில்



மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது குளவி தாக்கியதில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று( 08 -11-2023) காலை 7.00 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் மாணவர்கள் சம்பவதினமான இன்று காலை 7.00 மணியவில் வீதியால் நடந்து சென்ற நிலையில் குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் மாணவர்கள் மீது தாக்கியதையடுத்து 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள தாண்டியடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் குளவி கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக நடவடிக்கை எடுத்துவருதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை