பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி விக்ரமரத்ன எதிர்வரும் 25ஆம் திகதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சி.டி விக்ரமரத்னவிற்கு மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு காலம் முடிவடைந்த பின்னர், ஜூலை 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக மேலும் 3 வார சேவை நீட்டிப்பு ஒக்டோபர் 13 அன்று வழங்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மீண்டும் வழங்கப்பட்டது.

சி.டி விக்ரமரத்னவின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்க தவறிய பின்னணியில் இத்தகைய சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை