நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழு அண்மையில் கூடிய போது ஜகத் குமார சுமித்ராராச்சி இதனை கூறியுள்ளார்.
மேல்மாகாண மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களின் தலைவர்களும் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது அரச நிறுவனங்களில் பொது மக்களின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்வதும், நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு உடனடியாக பதில்களை அனுப்புவதும் முக்கிய விடயம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்கள் நிறுவனங்களுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு பதில் அனுப்புவது மிகவும் அத்தியாவசியமானது எனவும் ஜகத் குமார சுமித்ராராச்சி கூறியுள்ளார்.
ஆகவே அரச நிறுவனங்களில் தேவையான நேரங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.