மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் - மானிடத்துக்கு எதிரான குரோத செயற்பாட்டிற்கு கண்டனம்i




கடந்த 27 ம் திகதி போரில் இறந்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலிக்ப்பதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியும் அஞ்சலிப்பதற்க மக்கள் அமைதியாக ஒன்று கூடி அஞ்சலித்த வேளையில் அவர்களுக்கு பல்வேறு தடைகளை மிரட்டல்களை விடுத்து மிகவும் மிலேச்சத்தனமாக நடந்து மக்களை அச்சுறுத்தியும் மக்களின் அடிப்படை உரிமையினையும் மறுத்தும் மக்கள் உணர்வுகளை புண்படுத்தும் முகமாக இலங்கை பொலிசார் நடந்து கொண்ட முறையானது இந்நாட்டிக் ஜனாநாயக ஆழுகையின் உண்மை வடிவத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் சமகால நாகரிக உலகில் எங்குமே நடக்கதாக கொடுமையானதும் மிக அருவருக்தக்க செயலுமாகும் மிக ஈனத்தனமான இச் செயலினைக ;குறித்து மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தினராகிய ஆழ்ந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைவதோடு எமது கண்டனத்தினைப் பதிவு செய்கின்றோம்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் எமது உடனிருப்பையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறந்த தமது உறவுகளை நினைவு கூருவது என்பது ஒவ்வொரு தனிமனிதனின் பிறப்புரிமையும் மானிட உணர்வுடன் இரண்டறக்கலந்த ஆத்மார்த்தமான நிகழ்வாகும். ஒருவர் இறந்த தன் உறவை நினைவு கூர்ந்து அஞ்சலித்து கண்ணீர் விடுவதன் மூலம் உளம் ஆறுதலடையவும் மனவடு ஆறவும் இழப்பின் கொடும் துயரில் இருந்து படிப்படியாக வெளிவந்து சமாதானமான இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.

எனவே இறந்தவர்களை அஞ்சலிப்பது என்பத வெறுமனே ஒரு நினைவு கூருதல் மட்டுமல்ல மன வடுக்களை குனப்படுத்துதலுக்கான படிமுறையும் வாழும் சமயங்களின் நம்பிக்கையும் பாரம்பரியமுமாகும் எனவே இவ் நினைவு கூருதலையும் அஞ்சலிப்பதையும் தடுப்பதும் அடிப்படை மனித உரிமை மீறல் மட்டுமல்ல உள ரீதியான துன்புறுத்தலும் மனவடுக்களை குணப்படுத்த மறுப்பதும் அனைத்து சமயங்களின் சமய வழிமுறைகளை கொச்சைப்படுத்துவதுமாகும்

இவ்வாறானதெரு ஈனச் செயலை எந்தவொரு பகுத்தறிவுமிக்க சாமானியனும் செய்யமாட்டான் ஆனால் இங்கு ஸ்ரீலங்கா பொலிசாரே இச்செயலை செய்வது மிகப் பெரும் அவலமும் கொடுங்கோன்மையின் உச்சமுமாகும்

இறந்தவர்களுக்கே அஞ்சலிக்கும் உரிமையை கூட மறுத்து மக்களை ஒடுக்குகிறவர்கள் வாழ்பவர்களுக்கு எப்படி உரிமைகளை கொடுப்பார்கள் என்பது தெளிவு நi;டபெற்ற இச்செயல் இந் நாட்டின் ஜனநாயகத்தின் உண்மை முகத்தினை அம்பலப்படுத்தியுள்ளது எனவே இச்செயலுக்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான அவலம் நிகழாது இருக்கவும் மக்களின் உரிமைகளை பாதுகக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட அழைத்து நிற்கிறோம்.

செயலாளர்
பல் சமய ஒன்றியம்
மட்டக்களப்பு மாவட்டம்
29.11.2023
புதியது பழையவை