மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டித்தமை தொடர்பில், வாழைச்சேனைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்
மீது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாத நிலையில், இன்று வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் சந்தித்துக் கலந்துரையாடினார்.