ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக இலங்கைப் பெண் நியமனம்!ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு உதவி உயர்ஸ்தானிகராக இலங்கை பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவ்வகையில், இலங்கையைச் சேர்ந்த ருவேந்திரினி மெனிக்திவெல என்பவரே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்முறை அனுபவம்
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் நியூயோர்க் அலுவலகத்தின் பணிப்பாளராக பணியாற்றிவரும் ருவேந்தரினி மெனிக்திவெல, அகதிகள் சார்ந்த பணிகளில் பல தசாப்த கால தொழில்முறை அனுபவத்தை கொண்டவர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை