நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலயத்தால் - மட்டக்களப்பில் விற்பனை நிலையம்மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட
விற்பனை நிலையத்தை நேற்று(13-12-2023) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் திறந்து வைத்தார்.

மட்டக்கப்பு பிராந்திய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் முகம்மட் ஸப்றீன் தலைமையில் நிகழ்வு
இடம்பெற்றது.

சமுதாய சீர்திருத்த வேலைப்பரிசோதகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற நிகழ்வில், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு
மாநகர ஆணையாளர் சிவலிங்கம் மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதிவாளர், மட்டக்களப்பு சிறுவர் நன்நடத்தை நிலையப் பொறுப்பதிகாரி
ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமுதாயத்தில் சிறு குற்றவாளிகளை சீர்திருத்தி சிறந்த தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தின் அடிப்படையில் விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.புதியது பழையவை