இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர்அணி புதிய நிர்வாகத் தெரிவு இன்று(30-12-2023) இடம்பெற்றது.
அதனடிப்படையில் எமது கட்சியின் கொள்கையின் அடிப்படையில் ஜனநாயக ரீதியிலான வாக்கெடுப்பின் மூலம் தலைவி மற்றும் ஏனைய உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இதில் தலைவராக திருமதி ரஞ்சினி கனகராசா, செயலாளராக திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ், பொருளாளராக திருமதி கந்தையா கலைவானி, உபதலைவராக திருமதி கௌரி தயாளகுமார், உப செயலாளராக திருமதி தேவமணி ஆகியோருடன் நிர்வாக உறுப்பினர்கள் சகல பிரதேச பிரிவு ரீதியாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆலோசகராக திருமதி பிரபா செல்வராசா ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பொன். செல்வராசா அவர்களின் மனைவி) ஆகியோர் தெரிவானார்கள்.