பாலத்திற்கு அடியில் சிக்கிய விமானம்இந்தியாவின் மகாராஷ்ராவில் இருந்து மும்பைக்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த விமானமானது பீகாரில் உள்ள மேம்பாலம் ஒன்றுக்கு அடியில் நேற்று(30-12-2023) சிக்கிக் கொண்டுள்ளது.

விபத்து ஒன்றில் சேதமான குறித்த விமானமானது மும்பையின் அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டபோதே மேம்பாலத்திற்கு அடியில் சிக்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இதன்காரணமாக குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்பின்னர் பொது மக்களின் முயற்சியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதியது பழையவை