இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் அவர் இன்று (22-01-2024)காலை இரா.சம்பந்தனை கண்டு ஆசிபெற்றுக்கொண்டார்.
இதேநேரம் அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து பலமானதொரு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக முன்னோக்கி பயணிப்பதற்கு தமிழரசு கட்சியின் புதிய தலைவர் உறவுப் பாலமாக இருப்பார் என தாம் நம்புவதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்தார்.
தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஒற்றுமையை சீர்குலைக்க பேரினவாத சக்திகள் முற்பட்டுவருகின்றன இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்றும் வேலுகுமார் வலியறுத்தினார்.