கருணா மட்டுமல்ல அனைவருடனும் இணையத் தயார்- ச.வியாழேந்திரன்
கிழக்கு மக்களின் ஒட்டுமொத்த இருப்பை பாதுகாப்பதற்கான பொதுவான இணக்கப்பாட்டிற்கு வருவார்களாயின் கருணா மட்டுமல்ல அனைவருடனும் இணையத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்று(26-01-2024) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சீறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைத்துவத்திற்கு அவர் பொறுத்தமானவர்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

நிகழ் நிலைகாப்பு சட்டத்தில் சாதகமான விடயங்கள் உள்ளன. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் தொடர்பாக மிக மோசமாக கருத்துக்களை சமூக ஊடகத்தினுாடாக வெளிப்படுத்துகிற நிலையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.


அவை வரையறை செய்யப்பட வேண்டும். ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என்ற நல்ல விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளது.


இதே வேளை நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயற்படுகின்ற ஊடக சுதந்திரமென்பது என்பது பற்றி ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்துவருகின்றோம். இதன் மூலமாக ஊடகத்தினுடைய குரல்வளை நசுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை