மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய சோதனைசட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் மட்டக்களப்பின் களுவாஞ்சிக்குடி பகுதியில் யுக்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று (09-01-2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்குரிய தொலைபேசி இலங்கங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களும் பேருந்துகளில் பொலிஸாரால் ஒட்டப்பட்டன.

மேலும், களுவாஞ்சிகுடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இப்பரிசோதனை நடவடிக்கையில் களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜனக்க ரத்நாயக்க, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபயவிக்கிரம மற்றும் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை