நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் ஒத்திவைப்பு!

இன்று (26-01-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (26-01-2024)ஆம் திகதி  நள்ளிரவுடன் பாராளுமன்ற அமர்வு நிறைவுக்கு வருவதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை