மட்டக்களப்பில் பழமை வாய்ந்த இத்தி மரமொன்று அடியோடு சரிந்து வீழ்ந்துள்ளது!
மட்டக்களப்பு அரசடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பெரிய தம்பிரான் ஆலய வளாகத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த இத்தி மரமொன்று, நேற்று மாலை ஏற்பட்ட
சுழல் காற்றினால், அடியோடு சரிந்து வீழ்ந்தது.

வாகனங்கள் பழுதுபார்க்கும் கராஜ் ஒன்றின் வளாகத்தின் மீதே மரம் சரிந்து வீழ்ந்துள்ளது.

பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த, முச்சக்கர வண்டி, கார் உட்பட பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
புதியது பழையவை