பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!கதிர்காமம், ரஜமாவத்தை பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரித்து வந்த நபரை கைது செய்ய சுற்றிவளைப்புக்கு சென்ற கதிர்காமம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ தீ வைத்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
இதனால், மோட்டார் சைக்கிள் சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 
கதிர்காமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றைய இரு கான்ஸ்டபிள்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் இந்த சோதனைக்கு சென்றுள்ளார்.

 
இந்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு கதிர்காமம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சொந்தமானது எனவும் இந்த சோதனைக்காக கொண்டு வரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 
இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மோட்டார் சைக்கிளின் எரிந்த இரும்பு சட்டகத்தை மாத்திரமே பொலிஸாரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதியது பழையவை