பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று (01-02-2024) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரியூ பற்றிக்கை சந்தித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காக சிவஞானம் சிறீதரனுக்கு, அண்ட்ரியூ பற்றிக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும், ஈழத்தமிழர்களின் அரசியல் களத்தில் தான் கொண்டிருக்கும் கரிசனையையும் அண்ட்ரியூ பற்றிக் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை