குடிநீர் பிரச்சினையா - விசேட தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!



வறட்சியுடனான வானிலை காரணமாக உங்கள் பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினை காணப்படுமாயின், அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 117 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், குடிநீர் பிரச்சினை காணப்படுமாயின், தமது பிரதேச கிராம சேவை அதிகாரிக்கு அறிவிக்குமாறு நிலையம் தெரிவித்துள்ளது.


வறட்சியான வானிலை
அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையினால் 15 நீர் விநியோக நிலையங்களின் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை