கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெளியான எச்சரிக்கை!





அதிக வெப்பமான வானிலையில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு செத்துப் பிறப்பு மற்றும் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது

கர்ப்பிணிப் பெண்கள் குறித்து இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

வெப்பமான சுற்றுச்சூழல் நிலைமை

2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் வெப்பமான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் பணிபுரியும் 800 கர்ப்பிணிப் பெண்களைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சியை நடத்தியது.


குறித்த பெண்கள் விவசாயம், செங்கல் உற்பத்தி மற்றும் உப்பு உற்பத்தி துறைகளில் பணி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண்களில், 5 சதவீதமானோர் கருச்சிதைவுகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில், செத்துப் பிறப்பு மற்றும் குறைமாத பிரசவம் 6.1 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை