மட்டக்களப்பில் மாணவனை முறட்டுத்தனமாக தாக்கிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்!



மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தரம் 07 P வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் இப் பாடசாலையில் கணித பாடம் கற்பித்து வரும் இராசதுரை டிசாந் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) என்பவரால் தடித்த கம்பினால் முறட்டுத் தனமாக தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது....

கடந்த (13-03-2024)ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை முதலாம் பாட வேளையின் போது இவ் வகுப்பிற்குள் நுளைந்த இவ் உத்தியோகத்தர் இம் மாணவனைப்பற்றி பிறிதொரு மாணவன் சொன்ன பொய்யான குற்றச்சாட்டை கேட்டு விசாரணை ஏதும் செய்யாமல் இம் மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார்.


இத் தாக்குதலில் இடுப்பு மற்றும் பின்புறப் பகுதி வீக்கமடைந்து உட்காயங்களுக்குள்ளான இம் மாணவன் தனது பெற்றோருடன் களுவாஞ்சிக்குடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபின் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், இவரை கொடூரமாக தாக்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர் (14-03-2024)ஆம் திகதி பொலீசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் மறுநாள் (15-03-2024)ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டபின் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.


கல்வித்திணைக்களம் சார்பாக எந்த நடவடிக்கையும் இல்லை

பட்டிருப்பு கல்வி வலயப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியும் மாணவனை முறட்டுத் தனமாக தாக்கிய ஆசிரியருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளரும் ஆசிரியர்களுக்கு சார்பாக பக்கச்சார்வாக நடந்து கொள்வதாக தெரியவருகின்றது.

மட்/பட்/செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் 90%வீதமான ஆசிரியர்கள் அதேகிராமத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றனர் என தெரயவருகின்றன.

இவர்களுக்கு எந்தவிதமான இடம்மாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாக அதேகிராமத்தில் இருப்பதனால் அவர்களுடைய சொந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தலில் கூடுதலான கவனம் செலுத்துவதாகவும் ஏனைய மாணவர்களை புறக்கனிப்பதாகவும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்குமாகாண ஆளுனர் அவர்களின் கவனத்துற்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர்களின் இடம்மாற்றம் செய்வதில் பட்டிருப்பு கல்வி வலயம் பக்கச்சார்வாக அதே கிராமத்தை சேர்ந்த 90%வீதமான ஆசிரியர்களை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்க ஆனுமதி வழங்குவதனால் ஒரு சில ஆசிரியர் திறமையான மாணவர்களை புறக்கனிப்பதாக தெரியவருகின்றது.

மாணவனை தாக்கிய ஆசிரியருக்கோ பாடசாலை அதிபருக்கோ கல்வித் திணைக்களம் சார்வாக எந்தவிதமான நடவடிக்கையோ இற்றவரைக்கும் எடுக்கவில்லை.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் சம்பந்தப்பட்ட பாடசாலையில் வைத்து மாணவனை தாக்கிய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்(கணிதப்பாட ஆசிரியர்)அவர்களுக்கும் பாடசாலையில் கற்றல் செயற்பாடுகளில் பக்கச்சார்பாக இடம்பெறும் ஆசிரியர்களை வேறு வலயங்களுக்கு இடம்மாற்றம் செய்வேண்டும் என கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை